• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சி
  2017-08-11 17:00:23  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா பெரும் மக்கள் தொகை கொண்ட நாடாகும். இதனால் மருத்துவ சிகிச்சைத் தேவையும் அதிகம். இந்தத் துறையில் சமூக முதலீட்டுக்கான உள்ளார்ந்த ஆற்றலும் அதிகம். சீனத் தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலத்திட்ட ஆணையம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் வரை, சீனாவில் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை சுமார் 16 ஆயிரத்து 900 ஆகும். நாடளவில் மொத்த மருத்துவமனைகளின் எண்ணிக்கையிலும் இது 57.2 விழுக்காடு வகிக்கின்றது. 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை, சீனாவில் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை ஒரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் நாள் வியாழக்கிழமை சீனத் தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலத்திட்ட ஆணையம் பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. இதில் தெரிவிக்கையில்,

நிர்வாகச் செயல்பாடுகளை ஒழுங்கமைத்து எளிமைப்படுத்தி, மேலதிக இயக்க மற்றும் மேலாண்மை உரிமைகளை தொடர்புடைய நிறுவனங்களுக்கு அளிப்பது, கண்காணிப்பு மற்றும் மேலாண்மைப் பணியை மேம்படுத்துவது, சேவை திறமையை உயர்த்துவது ஆகிய துறைகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு, சமூக முதலீட்டை ஈர்ப்பதற்காக கொள்கைச் சூழ்நிலையை உருவாக்கி, வெளிநாட்டுத் திறப்பு அளவை மேலும் விரிவாக்கும் என்று இவ்வாணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வெளியான மருத்துவ சிகிச்சைத் துறையில் முதலீட்டை ஈர்ப்பது தொடர்பான அறிக்கையில், 10 முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன. புதிய கொள்கை விதிகளின்படி, முதியோருக்கான காப்பகத்தில் மருத்துவ அகம் அமைப்பதற்கான பரிசீலனை தேவை, மருத்துவமனைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு விகிதம் 70 விழுக்காட்டுக்கு மேல் இருக்கக் கூடாது என்பவை நீக்கப்பட்டுள்ளன. தவிரவும், முதியோருக்கான நலவாழ்வு சேவைத் துறையை முன்னேற்றுவது, மருத்துவ சிகிச்சைத் துறையில் வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்குவது முதலியவை பற்றியும் புதிய கொள்கைகளும் மேற்கொள்ளப்படும். ஹாங்காங், மக்கௌ, தைவான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் சீனாவின் மருத்துவ சிகிச்சைத் துறையில் முதலீடு செய்வதால் சிஈபிஏ மற்றும் ஈசிஎப்ஏ உடன்படிக்கைகளின்படி குறிப்பிட்ட சலுகையை அனுபவிக்கலாம் என்று தெரிகிறது. (வாணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040