இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள ஒரு அரசு மருத்துவமனையில் குறுகிய காலக்கட்டத்தில் பல குழந்தைகள் இறந்த சம்பவம் குறித்து அரசு புலனாய்வு செய்து வருகிறது என்று இம்மாநிலத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 13ஆம் நாள் குறிப்பிட்டார். 30 குழந்தைகள் இறந்ததற்கான காரணம் மூளை காய்ச்சல் தான். முன்பு செய்தி ஊடகங்கள் அறிவித்த மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகத் துண்டிப்பு அல்ல என்றும் அவர் அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வினியோகித்த தனியார் நிறுவனங்களுக்கு 70 இலட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தாத நிலையில், அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவதை நிறுத்திவிட்டனர். இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் வினியோக பற்றாகுறை காரணமாக இந்தக் குழந்தைகள் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது. கடந்த 5 நாட்களில் இந்த மருத்துவமனையில் குறைந்தது 64 குழந்தைகள் இறந்தனர் என்று உள்ளூர் செய்தி ஊடகங்கள் 12ஆம் நாள் கூறியது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்துக்குப் பிறகு, மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை போதுமான அளவிற்கு வைத்திருக்க உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. (வாணி)