• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜூலை திங்கள் சீனப் பொருளாதார நிலைமை
  2017-08-14 18:48:09  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகம் 14ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜூலை திங்கள், சீனப் பொருளாதாரச் செயல்பாடு நியாயமான இடைவெளியில் இருந்தது. உற்பத்தி தேவை சீராக அதிகரித்து வந்தது. பொருளாதாரம் சீராக வளர்ந்து, கட்டமைப்பு சரிப்படுத்தல் ஆழமாகி வரும் போக்கு தொடர்ந்து வருகிறது.

அன்று சீன அரசவை செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் செங் யூங் சீனத் தேசியப்பொருளாதாரச் செயல்பாடு பற்றி அறிமுகப்படுத்தினார். ஜூலை திங்கள், சீனப் பொருளாதாரச் செயல்பாட்டின் தரம் மற்றும் பயன் தொடர்ந்து மேம்பட்டு வந்தது என்று தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஜூலை திங்களில், தேசிய சேவைத் துறை உற்பத்தி குறியீடு ஜூன் திங்களில் இருந்ததை விட 8.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழிலின் அதிகரிப்பு மதிப்பு, ஜூன் திங்களில் இருந்ததை விட 6.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தவிர சீனாவின் நிலையான இருப்பு முதலீடு நிதானமாக அதிகரித்து வந்துள்ளது. இவ்வாண்டின் முதல் ஏழு திங்களில், சீனாவின் நிலையான இருப்பு முதலீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதோடு, சந்தை விற்பனை விரைவாக அதிகரித்துள்ளது. இணையம் மூல சில்லறை விற்பனைத் தொகை வலுவாக அதிகரித்து வருகின்றது. இவ்வாண்டின் முதல் ஏழு திங்களில், சீனாவின் இணையம் மூல சில்லறை விற்பனைத் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 33.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

எதிர்கால சீனப் பொருளாதார வளர்ச்சிப் போக்கு குறித்து மாவ் செங் யூங் பேசுகையில், சர்வதேச சூழல் இன்னமும் சிக்கலாக இருக்கின்றது. உள்நாட்டு கட்டமைப்புத் தன்மையுடைய முரண்பாடுகள் இன்னமும் முனைப்பாக இருக்கின்றன. அடுத்த காலக் கட்டத்தில், வினியோகத் துறை சீர்திருத்தத்தை முக்கிய நெறியாகக் கொண்டு, பொதுத் தேவையை விரிவாக்கி, திட்டமிட்ட நோக்க வழிகாட்டலை வலுப்படுத்தி, புத்தாக்கத்தை ஆழமாக்கி, பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040