உடல்நிலை காரணமாக போட்ஸ்வானாவில் மேற்கொள்ளவுள்ள பயணத்தை ரத்து செய்ததாக தலாய் லாமா அறிவித்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா சுன்யிங் 14ஆம் நாள் பேசுகையில், தலாய் லாமா எந்த பெயரிலும் எந்த ஒரு நாட்டிலும் சீனாவைப் பிளவுபடுத்தம் நடவடிக்கையில் ஈடுபடுவதை சீனா உறுதியாக எதிர்க்கின்றது என்று கூறினார்.
இதனிடையில், போட்ஸ்வானாவுடனான நட்பு ஒத்துழைப்புறவை வளர்ப்பதில் சீனா மிகவும் கவனம் செலுத்துவதாகவும், இரு நாட்டுறவு தொடர்ந்து சீராகவும் செயலாக்க முறையிலும் வளர வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். (வாணி)