இந்திய தேசிய புள்ளிவிபரப் பணியகம் 14ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் ஜூலை திங்களில் நுகர்வு விலை குறியீட்டு எண் அதாவது சிபிஐ குறியீட்டு எண், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.36 விழுக்காடு உயர்ந்துள்ளது.
காய்கறிகளின் விலை பெரிதும் உயர்வதால், இக்குறியீட்டு எண் அதிகரித்துள்ளது.
இக்குறியீட்டு எண் உயர்வதுடன், இந்திய மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் வாய்ப்பும் குறைக்கப்பட்டுள்ளது என்று சந்தையின் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.