பாகிஸ்தான் தலைவர்களுடன் சீனத் துணைத் தலைமையமைச்சர் பேச்சுவார்த்தை
2017-08-15 09:44:02 cri எழுத்தின் அளவு: A A A
பாகிஸ்தான் அரசுத் தலைவர் மாம்நுன் ஹுசைன் 14ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங் யாங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற 70ஆவது ஆண்டு நிறைவு நடவடிக்கையில் சீனப் பிரதிநிதிக் குழு கலந்துகொள்வதற்கு மாம்நுன் ஹூசைன் நன்றி தெரிவித்தார். பாகிஸ்தானும் சீனாவும் உற்ற நண்பர்களாகும். சீனாவுடனான உறவு, பாதிஸ்தானின் தூதாண்மையின் அடித்தளமாகும். சீனாவின் முக்கிய நலன்களுடன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து, பாகிஸ்தான் சீனாவுக்கு உறுதியான ஆதரவளிக்கும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து வருகிறது. இரு தரப்புகளின் பொருளாதார வழிபாதையின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து, சீனாவுடன் ஒத்துழைப்புகளை பாகிஸ்தான் வலுப்படுத்தும் என்றும் ஹூசைன் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய