பாகிஸ்தானின் தேசிய சுதந்திர தினத்தின் 70வது ஆண்டு நிறைவுக் கூட்டம் ஆகஸ்டு 14ஆம் நாள் இஸ்லாமாபாதில் நடைபெற்றது. சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங்யாங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது
2015ஆம் ஆண்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்ட போது, சீன-பாகிஸ்தான் உறவை, எல்லாக் காலங்களிலும் நெடுநோக்கு கூட்டாளி உறவாக உயர்த்தி, இரு நாட்டு நட்புப்பூர்வ ஒத்துழைப்புகளின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளார். பாகிஸ்தானுடன் இணைந்து, நெடுநோக்கு ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, மானிடப் பண்பாட்டியல் பரிமாற்றம் ஆகியவற்றை வலுப்படுத்த சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார். (பூங்கோதை)