சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் 15ஆம் நாளிரவு கொரிய தீபகற்ப நிலைமை பற்றி தொலைபேசி மூலம் விவாதித்தனர்.
தற்போதைய நிலைமையில், சீனாவும் ரஷியாவும் நெடுநோக்கு பார்வையுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பிரதேச நிலைமையை அமைதிப்படுத்த வேண்டும் என்றும் அண்டை பிரதேசத்தில் அமைதி குலைவதற்கு இரு நாடுகள் அனுமதி வழங்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க-தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி விரைவில் நடைபெறவுள்ளது. இதனால் கொரிய தீபகற்ப நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்று லாவ்ரோவ் கவலை தெரிவித்துள்ளார். ராணுவ ஆற்றல் மூலம் வட கொரிய அணுப் பிரச்சினையைத் தீர்ப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று அவர் தெரிவித்தார். (வாணி)