நேபாளத்தில் பயணம் மேற்கொண்டுள்ள சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங் யாங் 15ஆம் நாள் அந்நாட்டின் துணைத் தலைமையமைச்சரும், கூட்டாட்சி விவகாரம் மற்றும் பிரதேசத்தின் வளர்ச்சி அமைச்சருமான பிஜா குமார் காடருடன் சந்தித்துரையாடினார்.
இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை விரைவுப்படுத்தி, புதிய சாதனைகளைப் பெற கூட்டாக முயற்சி செய்ய வேண்டும் என்று ஒருமனதாகக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பிறகு, இரு தரப்பு ஒத்துழைப்பு ஆணையக் கையொப்பமிடும் விழாவில் இருவரும் கலந்துகொண்டனர்.