நேபாள அரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி 16ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டில், சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங்யாங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நேபாளமும் சீனாவும் ஒன்றுடன் ஒன்று இன்பத்துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் நல்ல அண்டை நாடுகளாகும். உண்மையான நண்பர்களாகும். சீனாவுடனான பாரம்பரிய நட்புறவில் நேபாள அரசு மற்றும் மக்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். நேபாளத்தின் வளர்ச்சி மற்றும் இயற்கைச் சீற்ற மீட்புதவிப் பணியில் சீனா வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது, இரு நாடுகளின் உயர் நிலை தலைவர்கள் நெருக்கமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர். பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகள் தடையின்றி வளர்ந்து வருகின்றன என்று பித்யா தேவி பண்டாரி தெரிவித்தார்.அதே நாள், அந்நாட்டின் தலைமையமைச்சர் பிரசண்டாவும், சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங் யாங்குடன் சந்தித்துரையாடினார்.