அறிவியல் என்னும் சீனாவின் புதிய ஆழ்கடல் ஆய்வுக் கப்பல், தற்போது மேற்கு பசிபிக் பெருங் கடலிலுள்ள கரோலின் எனும் கடல்நில உயர்ச்சி பற்றிய அறிவியல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்கள், தொலைவில் இருந்து இயக்கப்படும் நீர் மூழ்கிக் கலனைப் பயன்படுத்தி, இந்தக் கடல்நில உயர்ச்சியைப் புலனாய்வு செய்து, அதிகமான காணொளிகளையும் நிழற்படங்களையும் எடுத்துள்ளனர்.