• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
  2017-08-17 11:03:41  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புப் பணி பற்றிய 3வது கூட்டம் ஆகஸ்டு 16ஆம் நாள் சீனாவின் ஷான்தூங் மாநிலத்தில் நடைபெற்றது. சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய 5 நாடுகளின் போதை பொருட்கள் தடுப்பு அமைச்சகங்களைச் சேர்ந்த 20க்கும் மேலான பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

பிரிக்ஸ் கட்டுக்கோப்புக்குள், போதை பொருட்கள் தடுப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்புகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளன. மேலும், பிரிக்ஸ் போதை பொருட்கள் தடுப்புப் பணிக்குழுவின் தொடர்பு அமைப்பு முறையின் உருவாக்கம், உளவு பரிமாற்றம் மற்றும் சட்ட அமலாக்க ஒத்துழைப்பு, போதை பொருட்கள் தடுப்புக்கான சர்வதேசக் கொள்கை ஒருங்கிணைப்பு, ஆட்களின் பயிற்சி முதலியவை குறித்து ஒத்த கருத்துக்கள் எட்டப்பட்டுள்ளன. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040