பிரிக் என்ற சொல், முன்வைக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகும் அது இன்னும் வெற்றிகரமானதாக உள்ளது. எதிர்காலத்தில், உலகளாவிய சுகாதாரம், வறுமை ஒழிப்பு ஆகிய துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும், பிரிக் என்ற புதிய சொற்களை உருவாக்கியவரும், பிரிட்டனின் முன்னாள் நிதி அமைச்சருமான ஜிம் ஓ.நீல் செய்தியாளரிட்ம் தெரிவித்தார்.
2001ஆம் ஆண்டு பிரிக் என்ற பெயர் சொல்லை, ஜிம் ஓ.நீல் மிக முன்னதாகவே முன்வைத்தார். பிரிக்ஸ் நாடுகள், புதிய சந்தைகளையும் உலகின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன என்று அவர் கருதினார்.
பிற அரசியல் அமைப்புகளுடன் ஒப்பிடும் போது, பிரிக்ஸ் நாடுகளுக்கு மூன்று முக்கிய வேறுபாடுகள் உண்டு. முதலில், பிரிக்ஸ் நாடுகளின் மக்கள் தொகை அதிகம். இரண்டாவதாக, இந்நாடுகள் எல்லாம் வளரும் நாடுகளாகும். மூன்றவதாக, பிரிக்ஸ் என்பது புதிய அமைப்பு ஆகும். 7 நாடுகள் குழு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பத்துக்கும் அதிகமான ஆண்டுகளாக உள்ளன. இந்த வேறுபாடுகள், பிரிக்ஸ் நாடுகளின் மேம்பாடுகள் தான் என்றும் ஓ.நீல் கூறினார்.
அரசியல் மற்றும் பொருளாதாரத்தை தவிரவும், பிரிக்ஸ் நாடுகள், உறுப்பு நாடுகளின் பொது நலன்களுக்குப் பொருத்தமான ஒத்துழைப்புத் தலைப்புகளை மேலதிகமாக நிறுவலாம். எடுத்துக்காக, உலக சுகாதார அறைகூவல், வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், மாற்று எரியாற்றல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து வருவதைக் கருதி, பிர்க்ஸ் அமைப்பு மங்கி வருகிறது என்று சிலர் கூறினர். இந்த வேடிக்கையான கூற்றுக்கு பதில் அளித்து பேசுகையில், உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு விகிதம், முன்பு அவரது எவ்விதமான எதிர்பார்ப்பையும் தாண்டியுள்ளது என்று ஓ.நீல் குறிப்பிட்டார். சீனாவின் சியாமென் நகரில் 9ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் முன்பு, பொருளாதாரம், நிதி, மனித மற்றும் கலாச்சாரத் தொடர்பு, பாதுகாப்புத் தொடர்பு ஆகிய துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று சீனா முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழி நன்மைபயக்கும் என்று ஓ.நீல் தெரிவித்தார். மேலும், வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கையை வெற்றிகரமாக வகுத்தால், பிரிக்ஸ் நாடுகள் வேகமாக வளர்ந்து வரும் என்றும் அவர் கூறினார்