• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுக்களின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
  2017-08-18 09:21:57  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் நாடுக்களின் ஆட்சி முறைமை கருத்தரங்கு 17ஆம் நாள், தென் கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஃபூஜியாங் மாநிலத்தி சுவான்சோ நகரில் துவங்கியது. சீனா, ரஷியா, பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 5 பிரிக்ஸ் நாடுகளைத் தவிர, தான்சானியா, சிலி, மெக்சிகோ முதலிய நாடுகளின் அரசியல் தலைவர்கள், சிந்தனை கிடங்கு நிபுணர்கள், அறிஞர்கள் முதலியோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்த கையோடு கை கோர்த்து, பல்வகைப்பட்ட நாகரிகத்தின் செழுமையைத் தூண்டுவது, உலகளவில் ஆட்சி முறைமையை மேம்படுத்துவது ஆகியவை குறித்து இதில் கலந்துகொண்டோர் ஆழமான முறையில் விவாதித்தனர்.


திறப்பு, சகிப்பு, கூட்டு நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுதல், மனித குலத்தின் பொது சமூகத்தைக் கூட்டாக உருவாக்குதல் ஆகியவை என்பது இக்கருத்தரங்கின் தலைப்பாகும். ஆட்சி முறைமை தொடர்பான பரிமாற்றத்தை அதிகரிப்பது, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கிடையில் பொது கருத்துக்களாகும். இத்தகைய பொது கருத்துக்களை விரிவான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். சியாமன் நகரில் நடைபெறவுள்ள பிரிகிஸ் நாடுகள் தலைவர்களின் பேச்சுவார்த்தை எனும் கட்டுகோப்புக்குள், இக்கருத்தரங்கு, ஒரு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுத் துறையின் நிரந்தர துணை அமைச்சரும், மத்திய கமிட்டியின் நாகரிக அலுவலகத்தின் தலைவருமான ஹவாங் குன் மீங் இக்கருத்தரங்கில் உரைநிகழ்த்திய போது இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகாலத்தில், பிரிக்ஸ் ஒத்துழைப்பு அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது. தலைவர்கள் பேச்சுவார்த்தை, பல்வேறு துறைகளில் பன்முகங்க ஒத்துழைப்பு ஆகியவை இடம்பெறும் கட்டுகோப்பு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. 5 பிரிக்ஸ் நாடுகள், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு, கையோடு கை கோர்த்து முன்னேறும் நலன் மற்றும் செயல் பொது சமூகமாக விளங்குகின்றன. சொந்த நாடுகளின் நாட்டு நிலைமையின்படி, உண்மை நிலைமைக்கு ஏற்ப ஆட்சி முறைமை மற்றும் கொள்கையின் மூலம், பிரிக்ஸ் நாடுகள், சுயமான வளர்ச்சிப் பாதையில் நடைபோடும், அதோடு, மதிப்புள்ள அனுபவங்களை இந்நாடுகள் பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்தார்.


சீனாவின் மறுமலர்ச்சியுடன், தன் ஆட்சி முறைமை அனுபவம், மேலதிகமான நாடுகளால் கற்றுக்கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் வழங்கிய ஆட்சி முறைமை, மற்ற பிரிக்ஸ் நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்று அமெரிக்காவில் புகழ் பெற்ற நிபுணரும், சீனப் பிரச்சினைக்கான நிபுணருமான ராப்ட் லாரன்ஸ் குன் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040