பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு ஜூலை 17 மற்றும் 18ஆம் நாள் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் சுவான்சோவில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த பாதுகாப்பு துறை நிரந்தரக் கமிட்டியின் உறுப்பினரும், இந்திய-சீன நட்புறவுக் குழுவின் தலைவருமான தருண் விஜய், பிரிக்ஸ் என்ற உள்ளடக்கத்தை அவரது கோணத்திலிருந்து மதிப்பிட்டார். அவர் கூறியதாவது,
B(build the brotherhood), நாடுகளுக்கிடையிலான நட்புறவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. R(return of life), அதாவது வாழ்க்கையின் சாராம்சத்துக்குத் திரும்புவது. I(innerpeace), அதாவது உள் அமைதி. C(culture and civilization), அதாவது, பண்பாடு மற்றும் நாகரிகம். S(serve the mankind), மனித குலத்துக்குச் சேவை வழங்குவதாகும் என்றார் அவர். (பூங்கோதை)