சுங் வம்சத்தின் கடைசிக்காலத்திலும் ட்சிங் வம்சத்தின் துவக்கக்காலத்திலும் மீன் பிடிப்பு கப்பலின் இரு பக்கங்களில் கண்களை வரையப்படும் வழக்கம் உருவானது. அக்கால கட்டத்தில் மீனவரைப் பொறுத்தவரை, மீன் பிடிப்புக் கப்பலில் கண்களை வரைவது என்பது மிகவும் முக்கியமானது. இந்தக்கண்கள் அலங்காரமாக மட்டுமல்லாமல், மீனவர்களுக்குரிய வழியைக்காட்டி, மீன்களைப் பிடிப்பதற்கு உதவி செய்து, பயணத்தின் அமைதியை பேணிகாக்கும் என்று கருதப்பட்டது. (கலைமகள்)