ட்சியுவன்சோ நகரிலுள்ள கே யுவான் கோயில் 1300 ஆண்டுகால வரலாறுடையது. இந்தக் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது. தற்போது இக்கோயிலில் சான் பாணியுடைய சிறப்பான அஞ்சல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணியர்கள் ட்சியுவன்சோவின் மதப்பண்பாட்டை அறிந்துகொள்ளலாம். இந்த அஞ்சல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அஞ்சல் பெட்டிகள் மிகவும் சிறப்பானவை. ஒவ்வொரு அஞ்சல் பெட்டியிலும் வேறுபட்ட புத்தரின் உருவம் வரையப்பட்டுள்ளது. வேறுபட்ட அஞ்சல் பெட்டிகளில் அஞ்சல் அட்டைகளை உள்ளே இடுவதன் மூலம் செல்வம், காதல், அமைதி, உடல்நலம், படிப்பு, பட்டம் ஆகியவற்றைப் பெறலாம். இதைப்பார்க்கும் பொழுது உங்களுக்கும் அஞ்சல் அட்டைகளை பெட்டிக்குள் இட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறதா? அப்படியானால், நீங்கள் யாருக்கு அஞ்சல் அட்டையை அனுப்ப விரும்புகின்றீர்கள்? (கலைமகள்)