சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 18ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டேத்ரோஸைச் சந்தித்தார்.
புதிதாகப் பதவியேற்ற டேத்ரோஸுக்கு வாழ்த்து தெரிவித்த பிறகு லீகெச்சியாங் பேசுகையில், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக உலக சுதாகார அமைப்பின் பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, வளரும் நாடுகளின் சுகாதார துறையை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இவ்வமைப்பின் பணிகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
டேத்ரோஸ் கூறுகையில், சீனாவின் மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதார அமைப்பு முறையின் சீர்திருத்தம் பாராட்டுக்குரியது என்றும், இருதரப்பு நெடுநோக்கு ஒத்துழைப்பை மேலும் உயர்த்த விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.(வான்மதி)