இம்முறை அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளது. கடந்த 5 நாட்களில் 4லட்சத்து 60ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு குடியமர்த்தப்பட்டனர். அரசு 1289 மீட்பு மையங்களை நிறுவியுள்ளது.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அசாம் மற்றும் அந்நாட்டின் வட கிழக்குப் பகுதியின் மறுசீரமைப்புக்கு உதவியளிக்க, 2000கோடி ரூபாய் நிதித் தொகையை ஒதுக்கீடு செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.