மேலும், நடப்பு ஆய்வின் மூலம் சிங்காய்-திபெத் பீடபூமியின் சுற்றுச்சூழல் மாற்ற முறையைக் கண்டறிந்து, இயற்கை பாதுகாப்பு அமைப்பு முறையை மேம்படுத்துவது, சிங்காய்-திபெத் பீடபூமியின் தொடரவல்ல வளர்ச்சி, தேசிய இயற்கை பண்பாட்டு கட்டுமானம் மற்றும் உலக இயற்கைச் சூழல் பாதுகாப்பை முன்னேற்றுவதற்கு முக்கிய செல்வாக்கை ஏற்படுத்தும் என்றும் அவர் இச்செய்தியில் சுட்டிக்காட்டினார்.
சீன அறிவியல் கழகத்தின் தலைமையிலான இந்த ஆய்வில், சிங்காய்-திபெத் பீடபூமியிலுள்ள நீர், இயற்கைச் சூழல், மனிதர்களின் செயல்பாடு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்விடத்தின் வேலி செயல்திறன் பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா கட்டுமானத்துக்கான திட்டம் வழங்கப்படும்.(வான்மதி)