சிரியா தலைநகர் டமாஸ்கஸின் தென் பகுதியில் உள்ள டமாஸ்கஸ் சர்வதேசப் பொருட்காட்சி நடைபெறும் இடம் 20ஆம் நாள் பீரங்கிகுண்டு தாக்குதலுக்குள்ளானது. இதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமுற்றனர்.
பீராங்கி குண்டு அன்று காட்சியகத்தில் விழுந்து, ஒரு காட்சி மண்டலத்தின் நுழைவாயிலில் வெடித்தது. காயமுற்றோர் மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும், பலர் கடுமையாக காயமுற்றனர் என்றும் செய்தி அறிந்த ஒருவர் தெரிவித்தார்.
59ஆவது டமாஸ்கஸ் சர்வதேச பொருட்காட்சி 17ஆம் நாள் துவங்கியது. 43 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1600 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்துள்ளன.
20க்கும் அதிகமான சீனத் தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. இது வரை சீன மக்கள் இத்தாக்குதலில் காயமுற்றது தொடர்பான செய்தி இல்லை. (மீனா)