சீனச் சர்வதேச வளர்ச்சி அறிவு மையம் திறக்கப்படும் விழாவும், 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை சீனா செயல்படுத்தும் முன்னேற்றம் பற்றிய அறிக்கை வெளியிடப்படும் நிகழ்ச்சியும் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றன. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் இதற்கு வாழ்த்து மடலை அனுப்பினார்.
தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவது, தற்போதைய சர்வதேச வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பின் கூட்டு கடமையாகவும், சர்வதேச சமூகத்தின் கூட்டு பொறுப்பாகவும் திகழ்கின்றது. இந்நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீன அரசு பெரும் கவனம் செலுத்துகிறது. இந்நிகழ்ச்சி நிரலை சீனா செயல்படுத்தும் திட்டத்தை சீனா வெளியிட்டுள்ளது. பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய மூன்று துறைகளில் இந்நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் பணி சரிசமநிலையில் முன்னேறி, பல துவக்க நிலை பயன்களைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி நிரலை சீனா தொடர்ந்து உறுதியாக செயல்படுத்தி, தரம், பயன், நியாயம் ஆகியவை படைத்த தொடரவல்ல திசையை நோக்கி நாட்டின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று இம்மடலில் ஷீ ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். (மீனா)