1974ஆம் ஆண்டு வணிகச் சட்டத்தின் 301ஆவது விதிக்கிணங்க சீனா மீது ஆய்வு மேற்கொள்வதாக அமெரிக்க வணிகப் பிரதிநிதி பணியகம் அண்மையில் அறிவித்துள்ளது. இது குறித்து சீன வணிக அமைச்சகம் 21ஆம் நாள் பதிலளிக்கையில், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா புறக்கணித்து, தனது உள்நாட்டு சட்டத்தின்படி சீனா மீது வர்த்தக ஆய்வு மேற்கொள்வது பொறுப்பு அற்ற செயலாகும். சீனா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு நேர்மையற்றது. ஒரு தரப்பு வாதம் மற்றும் பாதுகாப்பு வாதம் தொடர்பான அமெரிக்காவின் இச்செயலுக்கு சீனா மனநிறைவின்மை தெரிவிக்கிறது என்று கூறியது.
மேலும், உண்மை, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மீதான இருநாட்டு வணிகத் துறைகளின் ஆர்வம், பல தரப்பு வர்த்தக விதிமுறை ஆகியவற்றுக்கு அமெரிக்கா மதிப்பளித்து, கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும், இந்த ஆய்வின் வளர்ச்சிப் போக்கில் கவனம் செலுத்தும் சீனா, தனது சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பேணிக்காக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.(வான்மதி)