ஆகஸ்ட் 15ஆம் நாள், சீன-இந்திய எல்லை பகுதியின் மேற்கிலுள்ள பான்கொங் ஏரிக்கு அருகில் சுற்றுக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சீனப் படைவீரர்கள் மீது இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தாக்குதல் தொடுத்தனர். இந்தச் செயலினால் சீன தரப்பினர் காயமுற்றனர் என்பதை சீனா உறுதி செய்துள்ளது என்று ஹுவா சுன்யிங் கூறினார்.
இந்தியாவின் இச்செயல், எல்லை பகுதியின் அமைதியைப் பேணிகாத்திட இருதரப்பும் உருவாக்கிய பொது கருத்தை மீறியுள்ளது. இந்திய தரப்பு இருநாடுகள் உருவாக்கிய குறிப்பிட்ட உடன்படிக்கையைப் மதித்து, படையினரின் செயலைக் கட்டுப்படுத்தி, எல்லைப் பகுதியின் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மையை உண்மையாகப் பேணிக்காக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.(வான்மதி)