சீன அரசவையின் உறுப்பினர் யாங்ச்சேச்சு 21ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலாளர் டாமினாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தற்போதைய சர்வதேச பிரதேசத்தின் நிலைமையில், சீனாவும் பாகிஸ்தானும் நெடுநோக்கு தொடர்புகளை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. இரு தரப்புகளும் உயர்நிலை பரிமாற்றம் மேற்கொண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் கட்டுகோப்புக்குள், சீன-பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதையின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பல தரப்பு அமைப்பு அமைப்புக்களில் என்ற அடிப்படையில், ஒருங்கிணைப்பை விரைவுபடுத்தி, பிரதேசத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியை கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று யாங்ச்சேச்சு தெரிவித்தார்.