2015ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள், ஐ.நாவின் வளர்ச்சி உச்சி மாநாட்டில், 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2016ஆம் ஆண்டு, இந்நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தும் திட்டத்தை சீனா வெளியிட்டது. 21ஆம் நாள் வெளியிடப்பட்ட 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை சீனா செயல்படுத்தும் முன்னேற்றம் பற்றிய அறிக்கை, உலகளவில் இந்நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவது தொடர்பான முதலாவது அறிக்கையாகும். இத்துறையில் சீனாவின் செயல்களையும் அனுபவங்களையும் இந்த அறிக்கை தொகுக்கும் அதே வேளையில், முக்கிய துவக்க நிலை பயன்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை சீனா உறுதியாக செயல்படுத்தி, பயன், நியாயம் ஆகியவை உள்ள தொடரவல்ல திசையை நோக்கி நாட்டின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் வாழ்த்து கடிதத்தில் தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில், அனைத்து வடிவத்திலான வறுமையை ஒழிப்பது, முதன்மை இலக்காகும். சீன அரசவை வறுமை ஒழிப்புப் பணியகத்தைச் சேர்ந்த வூ மின் இத்துறையில் சீனாவின் சாதனை குறித்து விவரித்தார். அவர் கூறியதாவது:
"2013ஆம் ஆண்டு முதல், சீன அரசு வறுமை ஒழிப்பு நெடுநோக்கு திட்டத்தைச் சரிபடுத்தியுள்ளது. சீன கிராமங்களின் வறிய மக்களின் எண்ணிக்கை, 2012ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த சுமார் 10 கோடியிலிருந்து 2016ஆம் ஆண்டில் இருந்த 4 கோடியாக குறைந்துள்ளது. சராசரியாக ஆண்டுக்கு சுமார் 1 கோடியே 40 லட்சம் மக்களாக குறைந்துள்ளது" என்றார் அவர்.
சீனச் சர்வதேச வளர்ச்சி அறிவு மையம் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. பரிமாற்றம் மற்றும் வளர்ச்சி கருத்தை ஆய்வு செய்து, சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, பன்னாடுகள் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதை முன்னேற்றுவதற்கு இம்மையம் ஆக்கப்பூர்வ பங்காற்ற வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் வாழ்த்து கடிதத்தில் தெரிவித்தார்.