2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் சியாமென் உச்சி மாநாட்டுக்கான கார்பன் நடுநிலை திட்டப்பணியின் துவக்க விழா 22ஆம் நாள் முற்பகல் சியாமென் நகரில் நடைபெற்றது. இவ்வுச்சி மாநாட்டின் போது, போக்குவரத்து, உணவகம், உறைவிடம் உள்ளிட்ட துறைகள் ஏற்படுத்தும் கரியமில வாயு வெளியேற்றம், காடு வளர்ப்பு முறையின் மூலம் குறைக்கப்பட்டு நடுநிலையாக்கப்படும். பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் வரலாற்றில் கார்பன் வெளியேற்றம் இல்லாத இலக்கு முதன்முறையாக நனவாக்கப்படும்.
கார்பன் நடுநிலை (carbon neutral) என்பது, குறிப்பிட்ட கால உற்பத்தி மற்றும் அலுவலில் ஏற்படும் பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் கணக்கிட்டு, காடு வளர்ப்பு உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம் இந்த வெளியேற்றத்தைக் குறைத்து நடுநிலையை உருவாக்குவதாகும். இதனால் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலை ஏற்படும். கார்பன் நடுநிலை, சர்வதேச மாநாடு மற்றும் விளையாட்டுப் போட்டியின் போது மேற்கொள்ளப்படும் நடைமுறையாக மாறியுள்ளது.(வான்மதி)