டோங்லாங் பிரச்சினை பற்றி இருநாடுகளின் கருத்துக்கள்
2017-08-22 19:41:44 cri எழுத்தின் அளவு: A A A
டோங்லாங் பிரதேசத்தில் இந்தியா-சீனா இடையேயான எதிர்ப்பு நிலைக்கு விரைவில் தீர்வு முறை காணப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 21ஆம் நாள் தெரிவித்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் பேசுகையில், இந்திய தரப்பு சொல்லுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என சீனா விரும்புவதாகவும், சட்ட விரோதமாக எல்லையைக் கடந்த நபர்களையும் சாதனங்களையும் இந்தியா நிபந்தனையின்றி உடனடியாக எடுத்துச் செல்வது இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு அடிப்படை மற்றும் முன்நிபந்தனையாகும் என்றும் குறிப்பிட்டார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய