2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது உச்சிமாநாடு, சீனாவின் சியாமன் நகரில் நடைபெறவுள்ளது. இவ்வாண்டின் ஆக்ஸ்ட் திங்கள் துவக்கத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் 7வது பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்தில், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையில் முதலீடு மீதான வசதிமயமாக்கத் திட்டத்தை, பல்வேறு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் கூட்டாக ஏற்றுக்கொண்டனர். உலகில் முதலீடு மீதான வசதிமயமாக்கம் பற்றிய முதலாவது சிறப்பு ஆவணம் தொடர்பான ஆக்கப்பூர்வமான அர்த்தம் என்ன?இதனை சர்வதேச சமூகம் மதிப்பிடுவது எவ்வாறு? இது பற்றிய விரிவான தகவல்.
பிரிக்ஸ் நாடுகளின் 7வது பொருளாதார வர்த்தக அமைச்சர்கள் கூட்டம், ஆக்ஸ்ட் திங்களின் துவக்கத்தில், ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. இது, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற முதலாவது பொருளாதார வர்த்தக அமைச்சர்கள் கூட்டமாகும். உலகில் முதலாவது முதலீடு மீதான வசதிமயமாக்கத் திட்டம், இக்கூட்டத்தின் முக்கிய சாதனையாகும். சீன வணிகத் துறையின் உலக வர்த்தக அமைப்புப் பிரிவின் பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பேற்கும் பொறுப்பான சிறப்புத் துணைப் பிரதிநிதி ஹூ யிங் ச்சி கூறியதாவது
பிரிக்ஸ் நாடுகளுக்கிடையில் முதலீட்டு வசதிமயமாக்கம் தொடர்புடைய நடைமுறை மற்றும் நடவடிக்கைகள் இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. முதலீட்டுக் கொள்கையின் வெளிப்படைத் தன்மையை வலுப்படுத்தி, முதலீடுகள் தொடர்புடைய நிர்வாக ஒழுங்கு முறை செயல்பாட்டுத் திறனை அதிகரித்து, முதலீடு தொடர்பான சேவை ஆற்றலை ஆழமாக்கி, இதன் நிலையை அதிகரிப்பது என்பது மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆவணம், பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பின் அமைப்பு முறைமயமாக்கம், முறைமைமயயாக்கம் மற்றும் விரிவானமயமாக்கம் முதலியவற்றை நனவாக்கும் முயற்சியாகும். பிரிக்ஸ் நாடுகளுக்கிடையில் முதலீட்டு ஒத்துழைப்பு புதிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை இது காட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.