அண்மை காலத்தில் கொரியத் தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையில் வட கொரியா கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை அமெரிக்கா வரவேற்கிறது. விரைவில் அமெரிக்கா வட கொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் துவங்குவதற்கு இது சாதகமாக இருக்கக்கூடும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரேக் திலேர்சன் 22ஆம் நாள் தெரிவித்தார்.
அவர் அன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், ஐ.நா பாதுகாப்பவை ஆகஸ்ட் 5ஆம் நாள் வட கொரியா தொடர்பான புதிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, வட கொரியா ஏவுகணை சோதனையை மேற்கொள்ளவில்லை. கோபமூட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். தற்போது வட கொரியா மேற்கொண்டுள்ள ஆக்கப்பூர்வ செயல்கள் வரவேற்புக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். (மீனா)