சீன அரசவை உறுப்பினர் யாங் சியேச்சி 23ஆம் நாள் அழைப்பை ஏற்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரேக்ஸ் திலேர்சனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
தற்போது, சீனாவும் அமெரிக்காவும் பரந்துபட்ட துறைகளில் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளன. இது இவ்விரு நாடுகள் மற்றும் உலகின் நலன்களுக்கு ஏற்றதாக இருக்கின்றது. இரு நாட்டு அரசுத் தலைவர்கள் உருவாக்கிய பொதுக் கருத்துக்கிணங்க, பல்வேறு நிலை பரிமாற்றத்தை இரு தரப்பும் வலுப்படுத்த வேண்டும். இவ்வாண்டு அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பின் சீனப் பயணத்துக்கு செவ்வனே ஆயத்தம் செய்ய வேண்டும் என்று யாங் சியேச்சி தெரிவித்தார்.
சீனாவுடன் இணைந்து தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சியைத் தூண்ட அமெரிக்கா விரும்புவதாக திலேர்சன் தெரிவித்தார். இவ்வாண்டு தனது சீனப் பயணத்தை அரசுத் தலைவர் டிரம்ப் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். (மீனா)