தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாநிலத்தில் 23ஆம் நாள், வாகனக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் அதிகாரி ஒருவர் அதே நாள் தெரிவித்தார்.
அதே நாள் மத்தியம் 11 மணியளவில், இம்மாநிலத்தின் தலைநகர் லாஷ்கர் காவல் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில், இத்தாக்குதல் நிகழ்ந்தது. இராணுவப் படையினர் இருவர், இரு மகளிர், ஒரு குழந்தை உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர் என்று உள்ளூர் காவற்துறையின் பொறுப்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.