2017ஆம் ஆண்டு உலக இயந்திர மனிதர் மாநாட்டின் துவக்க விழா 23ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் துணை தலைமையமைச்சர் லியு யன் துங் அம்மையார் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
புத்தாக்கம் மூலம் வளர்ச்சியைத் தூண்டும் நெடுநோக்கு திட்டத்தை சீன அரசு ஆழமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இயந்திர மனிதர் தொழில் நுட்பம், உற்பத்தி பொருள், அலுவல் முறை மற்றும் மாதிரியின் புத்தாக்கத்தை விரைவுபடுத்தி வருகிறது. உலக புத்தாக்க வலைப்பின்னலிலும், மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கையிலும் இயந்திர மனிதர் தொழில் ஆக்கப்பூர்வமாக ஒன்றிணைவதை முன்னேற்றி வருகிறது என்று லியு யன் துங் அம்மையார் சுட்டிக்காட்டினார்.(மீனா)