சௌதி அரேபியா தலைமையிலான பன்னாட்டுப் படை 23ஆம் நாள் ஏமன் தலைநகர் சாநா மீது வான் தாக்குதல் நடத்தியது. உணவு விடுதி ஒன்று இதில் தாக்கப்பட்டது. அதில் 35 பேர் உயிரிழந்தனர் என்று ஏமன் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் அதே நாள் தெரிவித்தார்.
தற்போது, தேடுதல் பணி தொடர்ந்து வருகிறது. இது வரை, உயிரிழந்தோரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. உயிரிழந்தோரில் பொது மக்களும் உள்ளனர் என்று செய்திஊடகங்கள் தெரிவித்தன.