24ஆவது பெய்ஜிங் சர்வதேச புத்தகப் பொருட்காட்சியும், 15ஆவது பெய்ஜிங் சர்வதேச புத்தக விழாவும் 23ஆம் நாள் துவங்கின. 89 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2500 வெளியீட்டகங்கள் பொருட்காட்சியில் கலந்து கொள்கின்றன. உலகளவில் புதிதாக வெளியிடப்பட்ட 3 லட்சம் புத்தகங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
நடப்பு புத்தகப் பொருட்காட்சியில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் உள்ள 28 நாடுகள் பங்கெடுக்கின்றன. ஈரான் நடப்பு புத்தகப் பொருட்காட்சியின் கௌரவ விருந்தினர் நாடாகும் என்று தெரிய வருகிறது(மீனா)