பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாததில் உள்ள சந்தை ஒன்றில் 23ஆம் நாள் தீ விபத்து நிகழ்ந்தது. சுமார் 1000 கடைகள் இதில் பாதிக்கப்பட்டன.
தீ விபத்து நிகழ்ந்த போது, இச்சந்தைக்கு விடுமுறை நாளாகும். இதனால், உயிரிழப்பு ஏற்படவில்லை. 20 தீ அணைப்பு வண்டிகளும் ஹேலிகாப்டர் ஒன்றும் தீயணைப்பு நடவடிக்கை மேற்கொண்டன. 3 மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
ஞாயிறுச் சந்தை, இஸ்லாமாபாதின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இச்சந்தையில் சுமார் 2000க்கு மேலான கடைகள் உள்ளன.