• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக இயந்திர மனிதர் மாநாடு
  2017-08-24 11:28:35  cri எழுத்தின் அளவு:  A A A   
5 நாட்கள் நீடிக்கும் 2017ஆம் ஆண்டு உலக இயந்திர மனிதர் மாநாடு 23ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. உலக இயந்திர மனிதர் ஆய்வு மற்றும் நுண்ணறிவு சமூகத்தின் வளர்ச்சி தொடர்பாக, உலக இயந்திர மனிதர் ஆய்வுத் துறையின் புதிய தொழில் நுட்பச் சாதனைகளைக் காட்சிக்கு வைத்து, பன்னாட்டு ஒத்துழைப்பு புத்தாக்க மேடையை உருவாக்குவது நடப்பு மாநாட்டின் இலக்காகும்.

புத்தாக்கம், தொழில் நடத்துதல் மற்றும் படைப்பு மூலம் நுண்ணறிவு சமூகத்தை வரவேற்பது என்பது நடப்பு மாநாட்டின் தலைப்பாகும். இம்மாநாட்டில், கருத்தரங்கு, கண்காட்சி, போட்டி ஆகிய மூன்று பகுதிகள் இடம்பெறுகின்றன. நூற்றுக்கும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு இயந்திர மனிதர் தொழில் நிறுவனங்கள், 300க்கும் அதிகமான நிபுணர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

23ஆம் நாள் நடைபெற்ற துவக்க விழாவில், சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மியெள வெய் பேசுகையில், இயந்திர மனிதரைப் பிரதிநிதியாக கொண்ட புதிய தொழில் நுட்பம், புதிய செயலி மற்றும் புதிய மாதிரிகள் தென்பட்டு வருகின்றன. புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்பச் சீர்திருத்தத்துக்கு முக்கிய இயங்கு ஆற்றலாக இவை மாறியுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனாவின் இயந்திர மனிதர் தொழிலின் அளவு, 20 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்து வருகிறது. இயந்திர மனிதர் தொழிலின் வளர்ச்சியில் சீன அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார். சீனத் தயாரிப்பு 2025 எனும் திட்டத்தை முன்னேற்றி, இயந்திர மனிதர் தொழிலை வளர்க்கும் பணியில், திறந்த வளர்ச்சி என்ற கருத்தைச் செயல்படுத்தி, இயந்தி மனிதர் துறையில் ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பை சீனா ஆழமாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"உலகளவில் மிக பெரிய இயந்திர மனிதர் தேவையை சீனா கொண்டுள்ளது. பல்வேறு நாட்டுத் தொழில் நிறுவனங்களும், அமைப்புகளும் இத்துறையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, வளர்ச்சி வாய்ப்பை கூட்டாக பகிர்ந்து கொண்டு, உலகப் பொருளாதாரத்தின் வலுவான தொடர்ச்சியான சமமான அதிகரிப்பை விரைவுபடுத்துவதற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்ற வேண்டும் என்று விரும்புகின்றோம்" என்றார் அவர்.

நடப்பு மாநாட்டின் போது, சீனா, அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் இயந்திர மனிதர் துறை நிபுணர்களும், தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் கருத்தரங்குகளில் கலந்து கொள்வர். இயநதிர மனிதர் தொழிலின் வளர்ச்சி வாய்ப்பு மற்றும் புத்தாக்க போக்கு, சந்தை எதிர்காலம் முதலியவை பற்றி அவர்கள் விவாதிப்பர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040