இந்த புத்தகம், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பீங்கினுடைய படைப்பாகும். 1988 முதல் 1990ஆம் ஆண்டு வரை, ஷிச்சின்பீங்கின் 29 முக்கிய உரைகள் மற்றும் புலனாய்வு கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இப்படைப்பின் இரு வெளிநாட்டு மொழிப் பதிப்புகள் வெளியிடப்பட்ட பின், ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வறுமை ஒழிப்பு வளர்ச்சி பற்றிய பல உயர்நிலை கருத்தரங்குகளிலும் சிந்தனைக் கிடங்குகளின் பரிமாற்ற நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் அதிக கவனம் மற்றும் பாராட்டு இப்படைப்பால் பெறப்பட்டுள்ளது.(ஜெயா)