லிபியாவில் சாட் நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முயலும் பயங்கரவாத சக்தியை கத்தார் ஆதரிப்பதால், கத்தாருடன் தூதாண்மை உறவைத் துண்டிக்க சாட் அரசு முடிவு செய்துள்ளது. 10 நாட்களுக்குள் சாட் நாட்டிலுள்ள தூதரகத்தை கத்தார் மூடவும், அந்நாட்டின் தூதாண்மை பணியாளர்கள் சாட்டிலிருந்து வெறியேறவும் வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சாட் நாட்டுக்கும், சாட் ஏரி பள்ளத்தாக்கு மற்றும் சஹேல் பிரதேசத்திலுள்ள இதர நாடுகளின் பாதுகாப்புக்கும் தீங்குவிளைவிக்க கூடிய அனைத்து செயல்களையும் கத்தார் நிறுத்த வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.(வான்மதி)