சீனா மீதான வர்த்தக தடை குறித்து சீனா கருத்து
2017-08-24 18:20:21 cri எழுத்தின் அளவு: A A A
சீன அதிகார வட்டாரத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2017ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சீனத் தயாரிப்புகளின் மீது குவிப்பு விற்பனைக்கு எதிரான 13 விசாரணைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. சீனா மீதான இந்தியாவின் வர்த்தக பாதுகாப்பு வாதம் சீனாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றி சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபேங் 24ஆம் நாள் கூறுகையில், இந்தியா கண்டிப்பான முறையில் விதிமுறைகளைப் பின்பற்றி, குறிப்பிட்ட நடவடிக்கைகளை வெளியிடுவதில் தெளிந்த சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு தான் வணிகச் சர்ச்சையை தீர்க்கும் பயனுள்ள வழிமுறை என்றும் சுட்டிக்காட்டினார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய