24ஆம் நாள் காலை, பயணியர் கப்பல் ஒன்று, பிரேசிலின் வடகிழக்கு பிரதேசத்தின் பாயிய மாநிலத்தின் தலைநகர் சால்வதோர் அருகில் மூழ்கி விபத்திற்குள்ளானது. இதில் 22 பேர் உயிரிழந்தனர் என்று பிரேசில் செய்தி ஊடகங்கள் 24ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப் படி, ஆறரை மணிக்கு, 129 பயணிகளை ஏற்றிச்சென்ற, மாரினோ ஒன்று என்ற பயணியர் கப்பல், வேரக்ரூஸ் துறைமுகத்துக்கு 200 மீட்டர் தொலைவான கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது. தற்போது 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று பிரேசில் கப்பல் போக்குவரத்து நிர்வாக வாரியம் தெரிவித்தது.
இரு நாட்களில் பிரேசிலில் நிகழ்ந்த இரு கப்பல் விபத்துகளில் ஒன்று இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)