சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாஹ் பெய்ஜிங்கிலுள்ள மாஸ்டர்கார்டு மையத்தை 26ஆம் நாள் பிற்பகல் பார்வையிட்டார். குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிக்கான பெய்ஜிங்கின் ஆயத்தப் பணிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
முன்பு தொழிற்சாலை இருந்த இடத்தில் பழைய கட்டிடங்களை மீண்டும் பயன்படுத்துவது தொடரவல்ல வளர்ச்சியை நாடும் முயற்சியாகும். இது உலகளவில் ஒரு தலைச்சிறந்த முன் மாதிரியாகும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் சீனாவில் விளையாட்டுக்களில் பொது மக்கள் பங்கெடுக்க ஊக்குவிக்கும் முயற்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் தியேன் ச்சின் மாநகருக்குச் சென்று, 13ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வார். (வாணி)