இந்தியாவின் வடமேற்குப்பகுதிகளில் 25ஆம் நாள் பெருமளவிலான கலவரம் நிகழ்ந்த பிறகு, ஹரியானா, பஞ்சாப், புது தில்லி ஆகிய இடங்களில் பதற்றமான நிலை தொடர்ந்து வருகிறது. பல பகுதிகள் அவசர நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ராணுவ படையினர்கள் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்தி, ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சகுலா மற்றும் சிர்ஸா ஆகியவற்றின் நகரவாசிகள் வெளியே செல்ல வேண்டாம் என்று உள்ளூர் காவல்துறை கோரியுள்ளது.
அதேசமயத்தில், தேசிய தலைநகர் பகுதியின் 13 காவல் மண்டலங்களில் 11 மண்டலங்கள் தற்போது அவசர நிலையில் இருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.