உற்பத்தி தொழில், பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையாகும். சீனப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சீனத் தயாரிப்பை வலுவப்படுத்த வேண்டும். பின்தங்கிய உற்பத்தி தொழில் நுட்பங்களையும் உற்பத்தித் திறன்களையும் உறுதியுடன் அகற்ற வேண்டும். புதுமையான வளர்ச்சி மூலமாக, சீனப் பொருளாதாரத்தை நடுத்தர மற்றும் உயர் நிலைக்கு முன்னெடுக்க வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 25ஆம் நாள் பணிக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.