• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வாத்தியக் கலைஞர்கள்]
வாங் சிஹெங்

வாங் சிஹெங் ஒரு புகழ் மிக்க சீனப் புல்லாங்குழல் இசைப்பாளர். இவர் சீன தேசிய இசைத் துறையில் ஒரு துடிப்பான கலைஞர். இவர் தற்போது சீன இசைவாணர்களின் சங்கம், சீனத் தேசிய மக்களின் இசைக்குழு, சீன வாத்திய ஆராய்ச்சிக் கழகம் போன்றவற்றில் ஓர் உறுப்பினராகவும் இருக்கிறார்.

1959இல் ஹங்ஜோஉவில் ஜெஜியாங்கில் பிறந்த வாங் கிஹெங், புகழ்வாய்ந்த புல்லாங்குழல் மீட்டுனரான ச்சாவோ சொங்திங் என்பவரிடம் கற்றார். பின்னர் இவர் மத்திய இசைப் பாதுகாப்பு மையத்தில் அல்லது ஷாங்கை இசைப் பாதுகாப்பு மையத்தில் கற்கும் வாய்ப்புப் பெற்றார். இறுதியாக இவர் மத்திய இசைப் பாதுகாப்பு மையத்தைத் தெரிவு செய்து பிரபல புல்லாங்குழல் வித்தகர் ஜெங் யொங்சிங் என்பவரிடம் கற்றார். அதே நேரத்தில் பேராசிரியர் வாங் யுசொங் இவரை வழிநடத்தினார். 1984இல் இவர் மத்திய இசைப் பாதுகாப்பு மையத்தில் பட்டதாரியாகிய பின்னர் மத்திய தேசிய வாத்தியக் குழுவில் சேர்ந்து அதனுடைய புல்லாங்குழல் கலைஞராக செயல்பட்டார். இந்தக் கலைப் பகுதியில் திரு வாங் தியே சுய்யும் திரு. லு சுன்லிங்கும் இவருக்கு உதவினார்கள். படிப்பதிலும் தொடர்ந்து முன்னேறுவதிலும் இவர் காட்டிய ஆர்வம் காரணமாக இசையில் உயர்வான ஆற்றல்களை அடைந்தார். இது இவரை பாரம்பரிய வடக்கு மற்றும் கிழக்கு பாணிகளை இணைப்பதற்கு உதவியது.

வாங் சிஹெங்கினுடைய இசை மீட்டல்கள் மிருதுவானதாகவும், நேர்த்தியானதாகவும், சந்தோஷமானதாகவும் மற்றும் கணீரெனவும் இருக்கின்றன. இவர் பல பிரமாண்டமான கச்சேரிகளில் பங்கு பெற்று, லு ஜி, லி குவான் ஜி மற்றும் ஷி யுயே மிங் போன்ற சிறந்த கலைஞர்களால் உயர்வாகப் போற்றப்பட்டார். இவர் மற்ற தொகுப்பாளர்களுடன் சேர்ந்து பல புதுமைத் தொகுப்புக்களை உருவாக்கினார். சில புதிய புல்லாங்குழல் நுட்பங்களையும் உருவாக்கினர்.

இவருடைய திறமையான கருத்து ஆழமுள்ள இசை மீட்டல் காரணமாக வாங் சிஹெங் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இசைப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றார்.

இவை மத்திய இசைப் பாதுகாப்பு மையத்தில் தேசிய படைப்புக்களின் மூன்றாம் பரிசு, முதலாவது தேசிய இராணுவ இசை அமைப்புப் போட்டியில் முதலாவது தனி இசைப் பரிசு, முதலாவது தேசிய வாத்தியக்கருவி தொலைக்காட்சிப் போட்டியில் இரண்டாம் பரிசு, வட கொரியாவில் நடந்த பதின் மூன்றாவது உலக இளைஞர் விழாவில் புல்லாங்குழல் வாசிப்பில் உயரிய தங்கப் பரிசு மற்றும் மக்கள் சீனக் குடியரசின் கலாச்சார அமைச்சகம் நடத்திய இசைக் காட்சியில் சிறந்த இசை மீட்டுனர் போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

வாங் சிஹெங் 1990இல் பெய்ஜிங் இசை மண்டபத்தில் தனது முதலாவது தனிப் புல்லாங்குழல் கச்சேரியை நடத்தி தேசிய இசை வித்தகர்களால் உயர்வாக பாராட்டப்பட்டார். "வாங் சிஹெங்கின் இசை வாசிப்புக்கள் எங்களுடைய மரபார்ந்த இசை வாசிப்புத் திறன்களை பரம்பரையாகப் பெற்று இருக்கிறார்" என லு ஜியான் கூறினார். இவர் நவீன இசை வாசிப்பில் திறமையானவராக இருக்கிறார்.

வாங் சிஹெங் ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இவை போன்ற பல நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சீனாவின் சார்பில் சென்றார். மேலும் இவருடைய நிகழ்ச்சிகள் பெரும் வெற்றி பெற்று மக்களால் பரவலாகப் போற்றப்பட்டது.

வாங் சிஹெங் கலாச்சாரப் பண்புகளில் அதிக கவனம் செலுத்தியதுடன், இவர் ஒரு பணிவுள்ள மாணவராகவும் இருக்கிறார். மேலும் இவர் எந்தப் பாணிகளை நோக்கியும் சார்ந்து இருக்காமல் எப்போதும் தன்னுடைய இசை வாசிப்புப் பாணியை எப்படிச் செய்வது என்பது பற்றியே யோசிக்கிறார். மகிழ்வதற்கான தொகுப்பு "வண்ணமயமான துணிகளின் பாடல்" ஆகும்.

[மகிழுங்கள்]: 《வர்ணமயமான ஆசைப் பாடல்》

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040