• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வாத்தியக் கலைஞர்கள்]

லு ரிரோங்

லு ரிரோங், ஹொபெய் மாகாணத்தில் ஜுன் நிர்வாகப் பிரிவில் 1933ம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் நாள் பிறந்தார். 1945இல் தமது கலைத்தொழிலை ஆரம்பித்து 1950இல் ஹன்ஜோங் கலைக் கூட்டுத்தாபனத்தின் இசைக்குழுவில் அர்கு பிடில் வாசிப்பவராகச் சேர்ந்தார். இவர் அர்கு பிடில் வாசிப்பதை பிரதான தொழிலாகவும், தொகுத்தல் மற்றும் இசை இயக்குதலை பகுதி நேரத் தொழிலாகவும் கொண்டார். 1954இல் இவர் பட்டதாரியாகி, பாடசாலையின் ஒரு ஆசிரியராகி, அர்கு பிடில் கற்பித்தார். நாட்டார் இசைக்குழுவின் நடத்துனராகவும் இருந்தார். இவர் இப்போது சியான் இசைப்பாதுகாப்பு மையத்தின் பட்டப்பின் படிப்பு மாணவர்களுக்கு கற்பிப்பதுடன், சீன இசை வாணர்களின் சங்கத்தின் தேசிய இசைச் சபையின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

ஏறத்தாழ ஒரு அரை நூற்றாண்டு காலம் இவருடைய கலை மற்றும் கற்பித்தல் காலப்பகுதியில் லு கற்பித்தல், பாடுதல் தொகுத்தல், இசை வழிநடத்தல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டினார். இவர் பற்பல ராகங்களை அல்லது சுகுதிகளைச் சேர்த்ததோடு பத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் "ஜின்-பாணி அர்கு பிடில்" மற்றும் "சங்" என்ற ஒரு இசைப் பாணி போன்றவற்றுக்கு முக்கியமான பங்களிப்புக்களை உருவாக்கினார்.

லுவின் கற்பித்தல் பாணி கவனமானதாகவும் சரியானதாகவும் இருக்கின்றது. இவர் கற்பித்தல், பாடுதல், தொகுத்தல் மற்றும் கோட்பாட்டு ஆராய்ச்சிகள் போன்ற எல்லாவற்றையும் ஒன்றகாக ஒன்றிணைப்பதை முன்மொழிந்தார். இவர் மாணவர்களிடம் முழுமையான தரத்தை வளர்ப்பதற்கு வேண்டினார். இவர் ஒரு தொகுதி உன்தைமான இசைத் திறமையுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்.

லுவின் இசை மீட்டல் அதிக உள்நாட்டு இயல்புகளுடன் ஒரே மாதிரியான அர்கு பிடில் பாணியைப் பண்பாகக் கொண்டிருக்கின்றது. இவருடைய இசை வாசிப்பானது மென்மையான இசையைக் கொண்டிருப்பதோடு 1960இல் பழைய இசை வாசிப்பவர்களின் பரம்பரையினரால் அங்கீகரிக்கப்பட்ட இசையின் நுண்ணிய கருத்தினை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.

லுவின் தொகுப்பானது உள்நாட்டு இசையின் வளப்படுத்திய மண்ணில் வே ரூன்றியது. வேறுபட்ட உள்நாட்டு நாட்டார் இசை வகைகள் இவருடைய தொகுப்பின் வற்றாத மூலங்களாக இருக்கின்றன. இவருடைய படைப்புக்கள் ச்சி பிரதேசத்தின் ஒரு புதுச்சுவையினைக் கொண்டிருக்கின்றன. இவருடைய புகழ் கூறுகின்ற படைப்புக்கள் ஷன்சி இசை நாடகத்தின் கேப்ரிசியோ அர்கு ராகங்கள், மகிழ்ச்சியான ச்சின்சுவான், பூக்கள் பறிப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்குகிறது.

லுவின் இசையமைப்பு இவருடைய படைப்புக்களின் உண்மையான மற்றும் ஆழமான விளக்கத்தில் இருந்து வந்திருக்க கூடிய உணர்சிகரமானதாகவும், புதுமையானதாகவும் மற்றும் சரளமானதாகவும் இருக்கின்றது. இவர் இசையமைத்த சிறந்த தேசிய இசைக்குழுப் படைப்புக்களின் தொடர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இவருடைய எதிராளிகளில் இருந்து பரந்த அளவில் போற்றப்பட்டு வெற்றி பெற்றன. இவர் பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் காட்சி இசையைத் தொகுத்துள்ளார். 1991இல் இவர் ஐரோப்பாவுக்குப் பயணம் செய்த "சங்" என்ற ஒரு பாரம்பரிய இசைக் குழுவுக்கு தலைமை தாங்கினார். சங்கின் ஒரு பாரம்பரிய இசை சிடி அல்பம் பிரான்சில் பதிவு செய்யப்பட்டு பாரிசில் ஒரு கல்வி சார் தங்கப் பதக்கத்தை வென்றது.

லுவின் பிரதான ஆய்வுக்கட்டுரைகளும் புத்தகங்களுமானது ஷன்சியின் பாணியியுடன் அர்கு பிடிலின் இசை வாசிக்கின்ற திறமைகளும் பண்புகளும், சங் உலகத்துக்கான ஒரு பாரம்பரிய இசையிலுடைய முதலாவது படி, உயர் இசைக் கல்வியில் தேசிய இசைக் கல்வியின் நிலை மற்றும் ஏனையவற்றை உள்ளடக்குகின்றன.

1980களுக்கு பின்னர் இவர் கலைப் பரிமாற்றம் மற்றும் கல்விசார் விரிவுரைகளின் நோக்கங்களுக்காக பல நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சென்றார். சீனாவினுடைய தேசிய இசையில் இவருடைய விரிவுரைகளான "ச்சின் பாணியுடன் அர்கு பிடில்" மற்றும் "சங்கின் ஒரு இசை வகையின் அறிமுகம்" போன்றவை உலகம் பூராக உள்ள எல்லா இசைச் சமூகங்களிடம் இருந்து பரந்த வரவேற்பை வென்றன. 1992இல் அரசவை நாட்டுக்கு அசாதாரண பங்களிப்பு செய்த வல்லுனர்களுக்கான ஒரு கெளரவ பட்டத்தை வழங்கத் தீர்மானிதத்தது.

[மகிழுங்கள்]: 《மெய்குவின் சுருதி》

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040