• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வாத்தியக் கலைஞர்கள்]

ப்பூ சொங்

ப்பூ சொங் 1934 மார்ச் மாதம் பிறந்தார். இவர் ஒரு பிறவிக் கலைஞர். இவருடைய தந்தையார் ப்பூலெய் ஒரு பிரபல கல்வியாளர், கலைக் கோட்பாட்டாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். ப்பூ சொங் நான்கு வயதாக இருந்த போதே இசையில் தன்னுடைய விசேட விருப்பத்தை வெளிப்படுத்தி, இசை ஒலிகளால் ஈர்க்கப்பட்டார். மூன்று வருடங்களுக்குப் பின்னர் இவர் லிஸ்ற்ஸ் என்பவரிடம் மாணவனாக சேர்ந்து கற்ற ஒரு இத்தாலிய நடத்துனரான மரியோ பசி என்பவரிடம் பியானோ கற்பதற்குத் தொடங்கினார். மூன்று வருடங்களுக்குப் பின்னர், மூன்னாள் ஐக்கிய சோவியத் சோஷலிசக் குடியரசில் இருந்து வந்த அடா புரொன்ஸ்ரெய்ன் இவரின் புதிய ஆசிரியராக வந்தார்.

1953இல் ருமேனியாவில் நான்காவது உலக இளைஞர் விழா நடத்தப்பட்டது. ப்பூ சொங் சீனாவிலிருந்து ஒரேயொரு போட்டியாளராக, இறுதிப் போட்டியில் பியானோ வாசிப்பில் கலந்து கொண்டு, மூன்றாம் கிடத்தை வென்றார். இச்செயலானது, இவரின் திறனால் சோவியத் யூனியனில் இருந்து வந்த போட்டியாளர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது எனக் கூறப்பட்டது.

1955 மார்ச் மாதம், வார்சாவில் ஐந்தாவது சோப்பின் சர்வதேசப் பியானோப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் உலகெங்கும் இருந்து எழுபத்தி நான்கு வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மிகவும் பலவீனமான போட்டியாளராக ப்பூ சொங் கருதப்பட்டார். ஆனால் மூன்று சுற்றுப் போட்டியின் பின்னர், ப்பூ சொங் தன்னுடைய Mazuka வாசிப்பினால் இறுதியில் மூன்றாம் இடத்தை வென்றார். இவருடைய புள்ளி இரண்டாம் மற்றும் முதலாம் இடங்களைப் பெற்றவர்களின் புள்ளிகளுக்கு மிகவும் நெருங்கியதாக இருந்தது. இவர் முதலாவது வெற்றியாளனாக இல்லாமல் இருந்தும் இவருடைய வசீகர வாசிப்பானது பெரும்பாலான மக்களை கவர்ந்து கொண்டது.

இந்தப் போட்டியின் பின்னர், ப்பூ சொங், 1958இன் முற்பகுதியில் பட்டப்படிப்பு வரை போலந்தில் தனது பியானோ கல்வியைத் தொடர்வதற்குத் தங்கியிருந்தார். அந்தக் காலப் பகுதிகளுக்கிடையில் இவர் விடுமுறைக்கு சீனாவுக்கு செல்வதை ஒரு வழமையாகக் கொண்டிருந்ததுடன் தன்னுடைய தனிக் கச்சேரியை பெய்ஜிங்கிலும் ஷாங்காயிலும் நடத்தினார். இவர் ஷாங்காய் இன்னிசைக் குழுவுடன் சேர்ந்து Monzaat இசை நிகழ்ச்சி நடத்தினார். 1958 டிசம்பரில் ப்பூ சொங் போலந்தில் இருந்து இங்கிலாந்துக்கு குடியேறினார்.

1960க்கும் 1980க்கும் இடைப்பட்ட இருபதாண்டுகளில் ப்பூ சொங் ஏறக்குறைய 2400 தனிக் கச்சேரிகளை நடத்தினார். இவர் மெனுகின், பேரென்பாய்ம் மற்றும் சுங், கு அங்-வா போன்ற பல பிரபல நடத்துனர்களுடன் சேர்ந்து செயல்பட்டார். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைத்தட்டுகளைப் பதிவு செய்தார். அத்துடன் இவர் சோப்பின் சர்வதேச பியானோ போட்டிகள், எலிசபெத் மகாராணியார் சர்வதேச இசைப் போட்டி மற்றும் நார்வே, இத்தாலி, சுவிஸ், போர்துக்கல் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நடந்த சில போட்டிகள் உள்ளிட்ட பல பியானோ போட்டிகளுக்கு நடுவராகப் பணிபுரிந்தார். இவர் உலகைச் சுற்றி மக்களுக்காக நிகழ்ச்சி நடத்தினார். இவரின் முயற்சிகளால் இவர் பெறுமதிமிக்க புலமையாளனாகக் கருதப்பட்டதுடன் டைம் இதழ் இவரை இப்போதுள்ள உயர்ந்த சீன இசையாளன் எனக் குறிப்பிடுகின்றது.

1976இல் ப்பூ சொங் சீனாவிற்குத் திரும்பி வந்து சீன மத்திய பாதுகாப்பு மையத்தில் தனது தனிக் கச்சேரியை நடத்தினார். அதன் பிறகு இவர் நிகழ்ச்சி நடத்துவதற்கும் படிப்பிப்பதற்கும் ஒவ்வொரு வருடமும் தனது தாய் நாட்டுக்கு வந்தார். இவர் பெய்ஜிங், ஷாங்காய், சியன், செங்டு மற்றும் குன்மிங் ஆகிய நகரங்களுக்கு ஏற்கனவே சென்றுள்ளார். இவர் சோப்பின் மொசார்ட் டெபுசி மற்றும் வேறு சில இசையாளர்களுக்கு விரிவுரைகளை வழங்கியதுடன் அவர்களின் படைப்புக்கள் மற்றும் ஷுபேர்ட் போன்ற வேறு சில சீரிய படைப்புக்களை வாசித்தார். இவர் பீத்தோவெனின் தொகுப்புக்களை வாசிப்பதற்கு மத்திய பிலார்மானிக்குடன் கூட்டுச் சேர்ந்தார். அத்துடன் இவர் சீன மத்திய பாதுகாப்பு மையத்தின் மாணவர்களுடைய பிலார்மானிக்குடன் சேர்ந்து மொசார்ட் படைப்புக்களை வாசித்தார். அதில் கவனத்தைக் கவர்ந்தாக இருந்தது என்னவெனில் அது இவர் இந்நிகழ்ச்சியின் நடத்துனராகவும் இருந்தது தான். அத்துடன் இவர் சீன மத்திய இசைப் பாதுகாப்பு மையத்துடன் இணைக்கப்பட்ட இடை நிலைப்பள்ளியின் உள்ளரங்க இசைக்குழுவின் பயிற்சியில் விசேட ஆசானாக இருந்தார். இவருடைய நீண்ட அனுபவம் மற்றும் ஆர்வமுடைய மனப்பாங்கு காரணமாக இசை ரசிகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவரை மதிக்கின்றார்கள்.

[மகிழுங்கள்]: 《ஷோப்பினின் கனவிசை》

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040