• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வாத்தியக் கலைஞர்கள்]

சொங் ப்பெய்

சொங் ப்பெய் 1969இல் பிறந்த ஒரு பெண் அர்கு வாசிப்புக் கலைஞர். "சீன நாட்டார் இசையின் அரசி" எனவும் அழைக்கப்படுகின்றார். இவரால் அர்கு, யாழ் மற்றும் கோட்டோ உட்பட 13 வாத்தியங்களை வாசிக்க முடியும்.

இவர் ஏழு வயதாக இருந்த போது, ரியன்யின் இசைப் பாதுகாப்பு மையத்தில் ஒரு பேராசிரியரான இவரது தந்தை சொங் குஓஷெங்கிடமிருந்து அர்கு கற்பதற்குத் தொடங்கினார். 1981இல் இவர் ரியன்யின் இசைப் பாதுகாப்பு மையத்துடன் இணைக்கப்பட்ட இடைநிலைப் பள்ளியில் சேர்ந்ததுடன் 1987இல் இவர் சீன இசைப் பாதுகாப்பு மையத்தில் ஒரு மாணவியானார். இவர் இந்தப் பாடசாலையில் அர்கு மற்றும் கோட்டோ கற்று, சீன தேசிய வாத்தியக் குழுவில் ஒரு அர்கு தனி இசைக் கலைஞரானார். 2000இல் இவர் தனது முதுநிலைப் பட்டங்களைப் பெற்றார்.

சொங் ப்பெய் இடைநிலைப் பள்ளியில் அவர் மாணவியாக இருந்த போது பல இசைப் போட்டிகளில் வென்றார். இவர் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பல விருதுகளைப் பெற்றார். இவர் சீன இசையாளர்களில் ஒரு பிரதிநிதியாக உலகைச் சுற்றி, காரின் மண்டபம் மற்றும் கோல்டன் கச்சேரி மண்டபத்தில் சீன நாட்டார் இசையை அரங்கேற்றி புகழ் பெற்றார்.

1990களில் சொங் ப்பெய் சீனாவில் ஒரு புகழ் பெற்ற பெண் இசை நடத்துனரான ஜெங் சியாஒ இங் தலைமை தாங்கிய பெண் பிலார்மானிக்குழுவில் இணைந்தார். அத்துடன் அவர்கள் சீனாவில் பல பல்கலைக்கழகங்களில் மேடையேறினார்கள். இவர் சீன நாட்டார் இசை முன்னேற்றத்தில் பல முயற்சிகளைச் செய்தார். அதே நேரத்தில் இவர்கள் ஐரோப்பாவிலும் மேடையேறினார்கள். அங்கு இவர்களின் நிகழ்ச்சி ஒரு உயர்ந்த வெற்றி பெற்றது. ஒரு முறை சொங் ப்பெய் கோர்சாகோவினுடைய உன்னத ஒலிநாடாவான பெரிய தேனிக்களின் பறப்பு என்பதைப் பாடிய நேரத்தில் மகிழ்ந்து கொண்டிருந்த பார்வையாளர்கள் இதை மீண்டும் ஒரு முறை பாடும் படி கோரிக்கை விடுத்தனர்.

1996இல் சொங் ப்பெய் எட்டு ஏனைய திறமையுடைய இளம் பெண் கலைஞர்களுடன் ஒன்பது நாட்டார் இசை அணியை உருவாக்கினார். அவர்கள் பல படைப்புக்களின் அறிமுகம், ஆராய்ச்சி மற்றும் சீன நாட்டார் இசை நாடாக்களை வெளியிடல் போன்றவற்றில் ஈடுபட்டனர். அவர்களுடைய நிகழ்ச்சிகள் சீனாவில் சீன நாட்டார் இசையின் ஆர்வத்திற்கு புத்துயிரூட்டியது.

1998 மற்றும் 1999களின் வசந்தகால விழாக் கலைப் பகுதியில் சொங் ப்பெய் கோல்டன் மண்டபத்தில் சீனத் தேசிய வாத்தியக் குழுவுடன் சேர்ந்து பாடியதோடு, இவருடைய அர்கு நிகழ்ச்சி பல ஐரோப்பியப் பார்வையாளர்களை உணர்ச்சிவயப்படுத்தியது.

1999இல் சொங் ப்பெய் திடீரென வாத்தியக் குழுவில் தமது நிலையைக் கைவிட்டு அர்கு கற்பிக்கும் ஒரு பேராசிரியரானார். இவர், ஒரு சிறந்த ஆசிரியரான தன்னுடைய தந்தையினால் ஆழமாக ஈர்க்கப்பட்டு இருப்பதாகவும், தன்னைப் போன்று பல சிறந்த மாணவர்களை உருவாக்க விரும்புவதாகவும் கூறுகிறார். இவர் இளம் மக்களிடையே நாட்டார் இசையை வளர்ப்பதற்கு ஆர்வமுள்ளவராக இருக்கிறார்.

2002இல் சொங் ப்பெய், பெய்ஜிங்கில் பதின் மூன்று கோவைகள் எனத் தலைப்பிடப்பட்ட தனிக் கச்சேரியை நடத்தினார். கச்சேரிக்காலப் பகுதியில் இவர் அர்கு, காகு, கோனோ, யாழ் உள்ளிட்ட பதின் மூன்று இசைக் கருவிகளை மீட்டினார்.

சிறந்த படைப்பு:ஒரு ஓடைகளும் சந்திரனும், குன்றில் பறவைகள் பாடுகின்றன. சீனப் பெருஞ்சுவரின் தோற்றத்திறன்.

[மகிழுங்கள்]: 《ஆவலோடு கேளுங்கள்》


1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040