சுயே வெய்
ஒரு வயலின் கலைஞரான சுயே வெய் 1963இல் பிறந்தார். முதலில் இவர் தமது ஆசிரிய ரான தெங் மாஒலிங்கிடம் கற்றார். அதன் பின்பு இவர் ஜின் ஜோங்பின், சென் சின்ஜி, தங் சுஜென் மற்றும் ஜெங் ஷிஷெங் போன்றவர்களிடம் தீவிரமாகப் பயிற்சி பெற்றார். நல்ல இசை அடிப்படையுடன் 1981இல் சீனத் தேசிய வயலின் போட்டியிலும், 1982இல் கார்ல் பிஃளெஷ் சர்வதேச வயலின் போட்டியிலும் பரிசுகளை வென்றார்.
1983இல் சுயே சீன இசைப் பாதுகாப்பு மையத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு பேராசிரியர் லின்யாஜியிடம் மாணவரானார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மேற்படிப்புக்காக பிரிட்டனுக்கு சென்றார். 1986இல் மாஸ்கோவில் சைவோஸ்கி வயலின் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் இரண்டு வாரங்களின் பின்னர் கார்ல் பிஃளெஷ் சர்வதேச வயலின் போட்டியில் பங்கு பெற லண்டனுக்குத் திரும்பினார். இவர் சொனாட்டா திறன் பரிசு, இசைவாத்தியம் மற்றும் பார்வையாளர் பரிசு உள்ளிட்ட எல்லாப் பரிசுகளையும் வென்றார். அதே வருடத்தில் இளம் தனி இசைக் கலைஞர்களுக்கான பிரித்தானிய வருடாந்திரப் பரிசை வென்றார்.
சுயே வெய் பல பரிசுகளை வென்ற பின்னர் உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றார். "கிரமோபோன்" என்ற பிரித்தானிய பிரபல சஞ்சிகையில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் இவரை "இன்றைய நாட்களில் உள்ள சிறந்த வயலின் வாசிப்பவர்களில் ஒருவர்" என அழைத்தது. "கார்டியன்" பத்திரிகை இவரை "அசாதாரண ஆற்றல், சிறந்த வழங்கும் திறன், பல்வகை வாசிப்பு மிக்க வெல்வதற்கரிய ஒரு வயலின் கலைஞர்" எனக் குறிப்பிட்டது. இவர் அடிக்கடி பிரிட்டனில் உள்ள ஒவ்வொரு பெரிய இசைக் குழுவுடன் ஒத்துழைத்ததோடு இவர் ஐரோப்பிய இசை பிரதேசத்தில் ஊக்கத்துடன் இருந்து, இவருடைய பதிவுகள் உயர்வாகக் குறிப்பிடப்பட்டன. புகழ்வாய்ந்த CD விமர்சகர் இவருடைய இசை மீட்டலை "பதிவுகளிலும் அல்லது கச்சேரியிலும் கேட்கின்ற ஒரு சிறந்த நிகழ்ச்சி என் மனதில் ஆழமாக பதிந்துள்ள" உணர்ச்சிமிக்கதும் சிறப்பானதுமாதுமான இசை மீட்டலாக இருந்துள்ளது" எனப் போற்றுகின்றார்.
1989இல் சுயே வெய் பிரித்தானிய அரசு இசைப் பாதுகாப்பு மையத்தில் ஓர் பேராசிரியராக சேர்ந்தார்.
[மகிழுங்கள்]: 《ஹுவோலா நடனம்》
1 2 3 4 5 6 7 8 9 10