• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வாத்தியக் கலைஞர்கள்]

தாங் ஜீன்ச்சியாஒ

தாங் ஜீன்ச்சியாஒ ஒரு சீனப் புல்லாங்குழல் இசைக்கலைஞர். இப்பெண்மணி இப்போது ஷாங்ஹாய் தேசிய இசை வாத்தியக் குழுவில் சிறந்த புல்லாங்குழல் இசைப்பாளராக இருக்கிறார்.

தாங் ஜீன்ச்சியாஒ சிறுமியாக இருந்த போது தனது தந்தையிடம் புல்லாங்குழல் இசைக்கக் கற்றதுடன் பல தடவைகள் இளைஞர் இசைக்கருவிப் போட்டிகளில் உயரிய பரிசினை வென்றார். 1986இல் இவர் பேராசிரியர் கொங் சிங்ஷனிடம் பாடம் கற்று, ஷெங்யாங் இசைக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட இடைநிலைப் பள்ளியில் சேர்ந்தார். இவர் பதினாறு வயதாக இருந்த போது இவர் தன்னுடைய முதலாவது தனிக்கச்சேரியை நடத்தினார். பின்னர் இவர் ஷாங்ஹாய் இசைக் கல்லூரியில் சேர்ந்து பிரசித்தி பெற்ற இரு புல்லாங்குழல் பேராசிரியர்களான ச்சாவோ சொங்திங் மற்றும் யு சுன்பா ஆகியோரின் மாணவியானார். இக்காலப் பகுதியில் தாங் ஜீன்ச்சியாஒ சில பிரபலமான தொகுப்புக்களைப் பதிவு செய்தார். 1996இல் இவர் திறமையான மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். தாங் ஜீன்ச்சியாஒ, ஷங்ஹாய் தேசிய இசை வாத்தயக் குழுவில் சேர்ந்து பிரதம புல்லாங்குழல் இசைப்பாளரானார். இப்போது இவர் தேசிய பாண்ட் குழுவில் சிறந்த பெண் புல்லாங்குழல் வாசிப்பவராகக் கருதப்படுகிறார்.

தங்கின் செயல்பாடு, கேட்பதற்குச் சிற்றத்தாகவும், திறன் மிக்கதாகவும் மற்றும் இதமானதாகவும் இருக்கின்றன. மேலும் இவருடைய இசையானது கேட்பவர்களில் அதிகமானவர்களின் மனதை உருக்கி கருத்தாழத்தை வெளிப்படுத்துகின்றன. இவர் "1999 புது வருடக்கச்சேரி" மற்றும் "2001 ஷங்ஹாய் வசந்தக்கச்சேரி" உள்ளிட்ட பல வகையான உள்ளரங்கக்கச்சேரிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு தனிப் புல்லாங்குழல் வாசிப்பவராகக் கலந்து கொண்டார்.

தன் த்துன் தொகுத்து, லீ அன் நடத்திய "பதுங்கும் புலியும் ஒளியும் டிராகனும்" என்ற படத்தில் புல்லாங்குழல் தனிப் பகுதியை பதிவு செய்வதற்கு தாங் ஜீன்ச்சியாஒ அழைக்கப்பட்டார். இந்த தொகுப்பானது ஒரு கிராமி இசை விருதைப் பெற்றதோடு உலக 18 திரைப்பட இசையின் தங்கப் பரிசையும் பெற்றது. தாங் ஜீன்ச்சியாஒ சர்வதேச இசைத்துறையின் கவனத்தை ஈர்த்தார். இவர் "பதுங்கும் புலியும் ஒளியும் டிராகனும்" என்ற திரைப்படத்தின் இசையமைப்புக்காக உலக புகழ் பெற்ற ஸெல்லோ இசைக்கலைஞர் யோ யோ மாவுடன் லண்டனுக்கு அழைக்கப்பட்டார். பின்னர் இந்தப் படத்தின் உலக இசைச் சுற்றுலாவை ஆரம்பித்தார். இவர் வேலைப்பளுவின் மத்தியிலும் ஜியா த்தாசுன் மற்றும் ஹெ சுன்தியன் போன்ற ஏனைய பிரபலமான தொகுப்பாளர்களுடன் கூட்டுறவை ஏற்படுத்தினார்.

2001 வசந்த விழாவில் ஷாங்ஹாய் தேசிய இசை வாத்தியக் குழுவுடன் இவர் ஒரு புது வருடக்கச்சேரியை வியன்னா "தங்க மண்டபத்தில்" நடத்துவதற்குச் சென்று அதில் அவர் தனிப் புல்லாங்குழல் வாசித்தார். ஜூலை திங்களில் இவர் "தாங் ஜீன்ச்சியாஒ புல்லாங்குழல் கச்சேரி" நடத்துவதற்கு அழைக்கப்பட்டார்.

ஒரு இசையாளராக இவர் எப்பொழுதும் உலக புகழ் பெற்ற இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளான பிரான்ஸ் நவீன இசை விழா, பெய்ஜிங் சர்வதேச இசை விழா ஷாங்ஹாய் சர்வதேச இசை விழாவின் ஷங்ஹாய் சர்வதேச வசந்தகால கலை விழா, மகெள சர்வதேச இசை விழா மற்றும் இவை போன்றவற்றில் பங்கு பெறுவதற்கு அழைக்கப்பட்டார். இவருடைய அதி திறமையான அரங்கேற்றங்கள் ரசிகர்களாலும், நிபுணர்களாலும் உணர்வுபூர்வமாகப் போற்றப்பட்டது. மேலும் "மூன்று உயர் நிலை பெண் தேசிய இசைப் பாடகர்களில்" ஒருவரான இவர், 21 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மகாநாட்டின் விழாவில் புல்லாங்குழல் வாசித்தார்.

தாங் ஜீன்ச்சியாஒ இலண்டன் இன்னிசை வாத்தியர் குழு, பிரான்ஸ் தேசிய இன்னிசை வாத்தியக் குழு, ஹாம்பர்க் இன்னிசை வாத்தியக் குழு, ஹாங்காங் இன்னிசை வாத்தியக் குழு, தைபெய் இன்னிசை வாத்தியக் குழு, சீனக் பிலார்மோனிக் வாத்தியக் குழு, ஷாங்ஹாய் இன்னிசை வாத்தியக் குழு மறறும் ஷாங்ஹாய் ஒலிபரப்பு இன்னிசை வாத்தியக் குழு போன்ற பல புகழ் பெற்ற இசைக் குழுக்களுடன் மேடையேறினார். அத்துடன் இவர் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, தைவான், ஹாங்காங் மகெள போன்ற நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் செல்கிறார். இவர் நவ சீனாவின் மிகவும் திறமையான இளம் புல்லாங்குழல் கலைஞர்களில் ஒருவர்.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040